போலீஸ் அகாடமி ஏடிஜிபி, மனித உரிமை ஆணைய ஐஜி, எஸ்பி ஓய்வு

சென்னை: போலீஸ் அகாடமி ஏடிஜிபி, மனித உரிமை ஆணைய ஐஜி, எஸ்பி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். சென்னை போலீஸ் அகாடமியில் ஏடிஜிபியாக இருப்பவர் ஈஸ்வரமூர்த்தி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குரூப் ஒன் தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். பெரும்பாலும் உளவுத்துறை, க்யூ பிரிவு, சென்னை மாநகர உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர், தற்போது போலீஸ் அகாடமியில் ஏடிஜிபியாக உள்ளார். 1963 மே 30ம் தேதி பிறந்த ஈஸ்வரமூர்த்தி, இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார். அதேபோல, கடலோர காவல்படையில் ஐஜியாக பணியாற்றி வந்த பிரபாகரனும் இன்று ஓய்வு பெறுகிறார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன், 1963 மே 3ம் தேதி பிறந்தார். குரூப் ஒன் தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். சென்னையில் போக்குவரத்து துணை கமிஷனர், திருப்பூர் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர் தற்போது சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாக பணியாற்றி வருகிறார். போலீஸ் அகாடமியில் எஸ்பியாக பணியாற்றி வந்த கங்கைராஜும் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

The post போலீஸ் அகாடமி ஏடிஜிபி, மனித உரிமை ஆணைய ஐஜி, எஸ்பி ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: