நாச வேலைக்கு சதியா? கேரளாவில் காரில் கடத்திய வெடிபொருட்கள் பறிமுதல்: போலீசார் பிடித்ததால் தற்கொலைக்கு முயற்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் காரில் கடத்திய வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரை ஓட்டிவந்தவா் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கலால் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஒரு காரில் ஏராளமான அளவு டெட்டனேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்த மூளியார் பகுதியை சேர்ந்த முகம்மது முஸ்தபா என்பவரை கைது செய்தனர்.

அவரது வீட்டில் 6 ஆயிரம் டெட்டனேட்டர்கள், 500 ஸ்பெஷல் ஆர்டினரி டெட்டனேட்டர்கள், 2 ஆயிரத்து 800 ஜெலட்டின் குச்சிகள், 300 ஏர் கேப், சீரோ கேப் 4, நம்பர் கேப் 7 ஆகிய வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட முகம்மது முஸ்தபா வீட்டு கழிப்பறைக்கு சென்ற போது கத்தியால் தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது.அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முகம்மது முஸ்தபாவின் பின்னணியில் நாசவேலை நடத்த திட்டமிட்டிருக்கும் கும்பல் இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாச வேலைக்கு சதியா? கேரளாவில் காரில் கடத்திய வெடிபொருட்கள் பறிமுதல்: போலீசார் பிடித்ததால் தற்கொலைக்கு முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: