7,000 மூட்டை நெல் மாயம் 68 ரைஸ் மில்களில் ஆய்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7 ஆயிரம் மூட்டை நெல் மாயமானதாக புகார் எழுந்தது. இதன் மதிப்பு ரூ.61 லட்சமாகும். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் விஜிலென்ஸ் போலீசார் வந்து சோதனை செய்தனர். இதில் 7ஆயிரம் மூட்டை நெல் மாயமாகியிருப்பது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 68 ரைஸ் மில்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post 7,000 மூட்டை நெல் மாயம் 68 ரைஸ் மில்களில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: