புதிய அகவிலைப்படி ஊதியம் ஜூனில் வழங்க நடவடிக்கை: மின் துறை செயலாளர் தகவல்

வேலூர்: தமிழக மின் துறை செயலாளர் மணிக்கண்ணன் அனைத்து தலைமை பொறியாளர்கள், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் அவலுலவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதற்கொண்டு வழங்கப்படும் என்றும், ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்திற்கு 38 சதவீதம் அகவிலைப்படியே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கணக்கிடப்பட்டு, நிலுவை தொகை மே 2023 மாதத்திற்கான ஊதியத்துடன் இணைத்து ஜூன் மாதம் பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (இசிஎஸ்) மூலம் வழங்கப்படும்.

அனுமதிக்கத்தக்க உயர்த்தப்பட்ட அகவிலைப்படியினை கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுகையில், ஒரு ரூபாய்க்கு குறைவாக வரக்கூடிய தொகை, அதாவது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின், அதனை ஒரு ரூபாயாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே 50 காசுக்கு குறைவாக இருந்தால், அதனை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை பெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புதிய அகவிலைப்படி ஊதியம் ஜூனில் வழங்க நடவடிக்கை: மின் துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: