செங்கல்பட்டில் சூறைக்காற்றுடன் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, அக்னி வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. நேற்று பகலில் அனல் காற்று வீசி வந்தது. இதனால், பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். குறிப்பாக முதியவர்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். வேலை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக சென்றவர்கள் கூட, கொளுத்தும் வெயிலால் சிரமத்துக்குள்ளாகினர்.

நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை நேரத்தில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திம்மாவரம், வேண்பாக்கம், ஆலப்பாக்கம், பரனூர், மகேந்திராசிட்டி, பி.வி.களத்தூர், வல்லம், புலிப்பாக்கம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post செங்கல்பட்டில் சூறைக்காற்றுடன் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: