காஞ்சிபுரத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கடந்த 6.10.2022 மற்றும் 30.5.2023 ஆகிய தினங்களில் நடைபெற்ற ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட கலெக்டரால் பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் 15 நாட்களுக்குள் விரைவாக நடவடிக்கை எடுக்கவும், இது குறித்து முன்னேற்ற அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிடவும், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதில், ஓய்வூதிய கருத்துரு அனுப்புதல், ஊதிய நிர்ணயம் மற்றும் அதனை சார்ந்த பணிகளை தொய்வின்றி செய்யும் வகையில் துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஓய்வூதியதாரர்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்க பிரதிநிதிகளால் தெரிவித்தனர். அதன்பேரில், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையில், ஓய்வூதியதாரர் மற்றும் அவருடைய மனைவியின் புகைப்படத்துடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பதிலளித்த ஓய்வூதிய இயக்குநர், மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவது தொடர்பாக பிரத்யேக பணி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், ஓய்வூதிய இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட கருவூல அலுவலர் அருள்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) புஷ்பா, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: