தண்டலம் ஏரியில் மண் எடுக்க மக்களிடம் கருத்து கேட்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம், சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்திற்காக அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு மையத்திற்கு பயன்படுத்தப்படும் இடத்தில் நிரப்ப மண் தேவைப்படுவதாகவும், இந்த மண்ணை தண்டலம் ஏரியில் இருந்து எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வருவாய் துறை சார்பில், தண்டலம் ஏரியில் மண் எடுத்து செல்ல தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குறித்து கருத்து கேட்கும் பணியை திருப்போரூர் வருவாய் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தண்டலம் கிராம மக்களிடம் இதுகுறித்த அறிவிப்பு அளிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.

The post தண்டலம் ஏரியில் மண் எடுக்க மக்களிடம் கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Related Stories: