சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு: 33 போலி பாஸ்போர்ட் பறிமுதல்

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் பாஸ்போர்ட் கும்பல் சிக்கியது. சென்னையில் போலி ஆவணங்கள் தயார் செய்து பாஸ்போர்ட், விசா எடுக்கும் கும்பல் செயல்படுவதாக போலீஸ் கமி‌ஷனருக்கு தகவல் கிடைத்தது.

சென்னை மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் போலி பாஸ்போர்ட், போலி விசாக்களை தயாரிக்கும் கும்பலை அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த வருவாய் புலனாய்வுபிரிவு அதிகாரிகள் இலியாஸ் என்பவரை கைது செய்து ஒரு வழக்கில் விசாரணை செய்த போது அவர் போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இலியாஸ் மற்றும் போலி பாஸ்போர்ட்களை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் மத்திய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்து விசாரிக்கும்படி தெரிவித்தனர். இதன் அடிப்படியில் இலியாஸிடம் விஷனை மேற்கொண்டத்தில் மேலும் இருவர் போலிபாஸ்ப்போர்ட் மற்றும் போலீ விசா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக திருவெற்றியூரை சேர்ந்த சிவகுமார் மற்றும் ராயபுரத்தை சேர்ந்த புகாரி ஆகிய இருவரும் போலி பாஸ்போர்ட்டை தயாரித்தது தெரியவந்தது.

அவர்கள் வீட்டில் சோதனை நடத்தியதில் மினி பாஸ்போர்ட் அலுவலகம் போல அவர்கள் வீட்டில் நடத்தி வந்தது தெரியவந்தது. குறிப்பாக பாஸ்போர்ட் தயாரிக்கும் அலுவலகத்தில் தேவைப்படும் அனைத்து பொருட்களும் அங்கிருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 160-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருட்களை அனைத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 4 வருடங்களாக போலிபாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து பலரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்த அதிரடி சோதனையின் மூலம் 33 போலி பாஸ்போர்ட்களையும், விசாக்களையும் பறிமுதல் செய்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஏஜென்ட் மூலம் விசா பாஸ்போர்ட் விண்ணப்பிக்கிறார்களோ அதே ஏஜென்ட் மூலம் பழைய பாஸ்போர்ட் பழைய வீசாக்களை வாங்கி அவற்றை புதிதாக தயாரித்து போலியாக பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரிப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே விசா மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட அலுவகத்தில் மட்டுமே விண்ணப்பிக்கும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இவர்கள் தயாரிக்கும் போலி பாஸ்போர்ட் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த போலிபாஸ்போர்ட்டில் பயன்படுத்தப்படும் தாள்கள் அனைத்தும் இலங்கையில் கொண்டு வந்து தயாரிக்கபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுடன் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் அவர்களின் விவரங்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு: 33 போலி பாஸ்போர்ட் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: