அரசு மருத்துவமனையில் மருத்துவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய போதை ஆசாமி

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் சூர்யா இவர் இரவு 1 மணி அளவில் கல்லிரல் பிரச்சனைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த போதை நோயாளி பாலாஜி என்பவரின் உடல் நிலையை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது வெறி பிடித்தவர் போல் காணப்பட்ட பாலாஜி தான் கையில் சொருகி வைக்கப்பட்டிருந்த குளுக்கோஸ் ஊசியினை அகற்றுமாறு சூர்யாவிடம் கூறியுள்ளார்.

அதை இப்போது அகற்றயிலாது என்று சூர்யா மறுத்த நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை நோயாளி பாலாஜி மருத்துவ உபயோகத்திற்காக பயன் படுத்தப்படும் கத்திரிக்கோலை எடுத்து மருத்துவர் சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் சூரிய ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பயிற்சி மருத்துவரின் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் தீடீர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு வருகிற காலங்களில் உறுதிப்படுத்தப்படும் என்றார். தற்போது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக போதை நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருப்பதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் எனவும் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாகவம் மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப் படுவார்கள் எனவும் தேரணிராஜன் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் இதுப்போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கையானது எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் மருத்துவர்கள் நடத்திய 3 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அரசு மருத்துவமனையில் மருத்துவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய போதை ஆசாமி appeared first on Dinakaran.

Related Stories: