பெட்ரோல் பங்க் தொட்டியில் மயங்கி விழுந்து 3 பேர் சாவு

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், ராயச்சோட்டி நகரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பஷீர்கான் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் உள்ள பெட்ரோலை தேக்கி வைக்கும் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடப்பாவில் இருந்து நாகேந்திரன், ரவி, சிவா ஆகிய 3 டெக்னீஷியன்களை ராயச்சோட்டிக்கு அனுப்பியது.

நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணியளவில் 3 பேரும் பெட்ரோல் பங்க் வந்து, பெட்ரோல் தேக்கி வைக்கும் தொட்டியின் மூடியை திறந்தபோது, ஒருவர் மயக்கமடைந்ததாக தெரிகிறது. இதில் அவர் தொட்டியில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு நபரும் உள்ளே விழுந்தார். சில நொடிகளில்3வது நபருக்கும் மயக்கம் ஏற்பட்டு தொட்டியில் விழுந்தார்.அங்கிருந்தவர்கள் இருவரை சடலமாக மீட்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

The post பெட்ரோல் பங்க் தொட்டியில் மயங்கி விழுந்து 3 பேர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: