‘சாவுக்கு போக கூடாதுன்னு மிரட்டுறாங்க’நீங்கதான் சரி செய்யணும் கலெக்டர் அய்யா…மழலை குரலில் சிறுமி கோரிக்கை

நாகப்பட்டினம்: சாவுக்கு போக கூடாதுன்னு மிரட்டுறாங்க. இதை நீங்கதான் சரி செய்யணும் கலெக்டர் அய்யா என மழலை குரலில் சிறுமி கோரிக்கை வைத்தார். நாகப்பட்டினம் அருகே பெருங்கடம்பனூர் ஊராட்சி பகுதியில் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு காத்திருந்த 7 வயது சிறுமி, கலெக்டருக்கு சால்வை அணிவித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அப்போது அந்த சிறுமி, எங்கள் பகுதியில் நற்பணி கழகம் வைச்சிருக்கவங்க எங்களை வாழ்வுக்கும் (திருமணம் போன்ற நிகழ்வுகள்) , சாவுக்கும் போக கூடாதுன்னு கட்டளை இடுறாங்க.

மீறி போனா அடிப்போம்னு சொல்லி மிரட்டுறாங்க. எங்க மாமா இடி விழுந்து இறந்தப்போ அவங்களை யாரும் தூக்க கூடாதுன்னும் கட்டளை போடுறாங்க. இதை நீங்கதான் சரி செய்யணும் அய்யா என்று மழலை குரலில் கோரிக்கை வைத்தார். இதை கேட்ட கலெக்டர், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து சிறுமியிடம் உங்க பேர் என்ன, எந்த ஸ்கூலில் படிக்கிறீங்க, எந்த வகுப்பு படிக்கிறீங்க, இப்ப ஸ்கூல் லீவா என்று கனிவோடு விசாரித்தார். சிறுமியின் மழலை மொழி கோரிக்கை அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post ‘சாவுக்கு போக கூடாதுன்னு மிரட்டுறாங்க’நீங்கதான் சரி செய்யணும் கலெக்டர் அய்யா…மழலை குரலில் சிறுமி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: