ஜப்பானில் சீர்காழி மாணவனுக்கு முதல்வர் பரிசு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியை சேர்ந்தவர்கள் ஏபிஎஸ் மோகன் – மீரா தம்பதி. இவர்களின் மகள் மூகாம்பிகை. இவரது கணவர் விஜயகுமார். இவர்கள் தற்போது ஜப்பானில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பான் சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், டோக்கியோவில் நடந்த தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மூகாம்பிகை -விஜயகுமார் தம்பதியின் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அர்ஜுனை பாராட்டி சிறந்த மாணவனுக்கான விருதை வழங்கினார். இதையறிந்த சீர்காழியில் வசிக்கும் அவர்களின் உறவினர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post ஜப்பானில் சீர்காழி மாணவனுக்கு முதல்வர் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: