பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல் பெறலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில், 2023ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் அதற்கான வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை இரு நகல்கள் எடுத்து நாளைபிற்பகல் முதல் 3ம் தேதி மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி. ராணிப்பேட்டை திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் – அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்களை தேர்வர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

மறுமதிப்பீடு:
ஒரு பாடத்துக்கு ரூ.500
மறுகூட்டல் II:
உயிரியல் பாடம் மட்டும் ரூ.305
ஏனையப் பாடங்கள்
(ஒவ்வொன்–றிற்கும்) ரூ.205

The post பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல் பெறலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: