கழிவுநீர் வடிகால் வாய்க்கால் மீது சிமெண்ட் சிலாப் அமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்திற்குட்பட்ட பின்னலூர் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் சாலை இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்ட்டினால் ஆன தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. லட்சக்கணக்கான மதிப்பீட்டில் நடைபெறும் இந்த கட்டுமான பணி தரமின்றி கட்டப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் குடியிருப்பு மற்றும் அடிக்கடி பேருந்துகள் மற்றும் கார்கள் செல்லும் பகுதியில் கழிவுநீர் செல்லும் பாதைக்கு மேலே இருபுறமும் சிமெண்ட் சிலாப்கள் கொண்டு மூடப்படாமல் உள்ளதால் குழந்தைகள் கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. மழைநீர் தேங்கி நிற்கு அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பின்னலூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு கழிவுநீர் செல்லும் பாதைக்கு மேலே சிமெண்ட் சிலாப்களை அமைக்க உத்தரவிடுமாறு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கழிவுநீர் வடிகால் வாய்க்கால் மீது சிமெண்ட் சிலாப் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: