பங்குச் சந்தையில் வர்த்தக தொடக்கத்திலேயே மீண்டும் 63,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்; 0.5% உயர்வுடன் நிறைவு..!!

மும்பை: பங்குச் சந்தையில் வர்த்தக தொடக்கத்திலேயே மீண்டும் 63,000 புள்ளிகளை தொட்டு இறங்கிய சென்செக்ஸ், 0.5% உயர்வுடன் நிறைவுபெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்ந்து 62,846 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்கு 3.7%, டைட்டன் பங்கு 2.4%, டாடா ஸ்டீல் பங்கு 1.8% விலை உயர்ந்து வர்த்தகமாயின.

எஸ்.பி.ஐ., எச்.டி.எஃப்.சி., அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் 1.5%, இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.டி.சி. பங்குகள் 1% விலை உயர்ந்தன. என்.டி.பி.சி., பஜாஜ் ஃபின்செர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பார்த்தி ஏர்டெல் பங்குகளும் விலை உயர்ந்தன. எச்.சி.எல். டெக், பவர்கிரிட், மாருதி சுசூகி, விப்ரோ, டி.சி.எஸ்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து விற்பனையாகின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து 18,599 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post பங்குச் சந்தையில் வர்த்தக தொடக்கத்திலேயே மீண்டும் 63,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்; 0.5% உயர்வுடன் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: