100க்கும் மேற்பட்டோருக்கு பாலியல் தொல்லை பெண்களிடம் சில்மிஷம் செய்வது என்னை அறியாமல் நடக்கிறது : போலீசாரிடம் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் சில்மிஷம் செய்தது என்னை அறியாமல் நடந்தது. அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான வாலிபர் கூறியுள்ளார். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் ஒருவர் தனக்கு மர்மநபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். அதனடிப்படையில் திருமங்கலம் மகளிர் போலீசார், முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த சரவணன்(31)என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.அவர் மீது 30ம்மேற்பட்டபெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து சரவணன் வாக்குமூலமாக அளித்ததாக போலீசார் கூறுவதாவது:2021ம் ஆண்டு திருமங்கலம் பகுதியில் தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு பைக்கில் தப்பி சென்றார். பொதுமக்கள் அவரை விரட்டி, பிடித்து மகளிர்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனால், போக்சோவில் வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பெரவள்ளூர் காவல்நிலையத்தில், பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் ‘‘நான் திருமண நிகழ்ச்சி, திருவிழா நிகழ்ச்சியில் பாடுவேன். கார் டிரைவராகவும் உள்ளேன். சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்கள், சிறுமிகளை நோட்டமிட்டு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிவிடுவேன். தனியாக இளம்பெண்கள் செல்வதை பார்த்தால் வாகனத்தை நிறுத்திவிட்டு சில்மிஷத்தில் ஈடுபடுவேன். என்னை அறியாமலேயே எனக்கு அப்படியொரு எண்ணம் வந்துவிடுகிறது. இந்த குற்றத்துக்கு நான் காரணமா அல்லது என் உணர்ச்சிகள் காரணமாக என்பது தெரியவில்லை. தினமும் 5 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவேன். இதுவரை 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளேன்’’ என்றார்.

 

The post 100க்கும் மேற்பட்டோருக்கு பாலியல் தொல்லை பெண்களிடம் சில்மிஷம் செய்வது என்னை அறியாமல் நடக்கிறது : போலீசாரிடம் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: