ஒரு வார கால அவகாசமே உள்ளதால் பிஇ படிப்புக்கு உடனே விண்ணப்பிக்க வேண்டும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: பிஇ இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் படிப்பு படிக்க இன்னும் ஒரு வார காலமே அவகாசம் உள்ளது அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டுகளில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு மே 5ம் தேதி தொடங்கியது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். முதல் நாளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வரையிலான நிலவரப்படி, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 815 பேர் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 836 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 375 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர். பிஇ படிப்புக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் (ஜூன்) 4ம் தேதி ஆகும். எனவே, இந்த ஒருவார காலஅவகாசத்தை பயன்படுத்தி விருப்பம் உள்ள மாணவர்கள் பிஇ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஒரு வார கால அவகாசமே உள்ளதால் பிஇ படிப்புக்கு உடனே விண்ணப்பிக்க வேண்டும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: