முதல்வர் டிவிட் இந்தியாவிலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை

சென்னை: புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ., தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

The post முதல்வர் டிவிட் இந்தியாவிலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை appeared first on Dinakaran.

Related Stories: