தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது அறுவடை பருவத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. மழைநீர் தேங்கியதால் நெல் மணிகள் நனைந்து வீணாகி வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறையினர் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.
The post தஞ்சை அருகே சூறாவளி மழை 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.