கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி

நாகப்பட்டினம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. நாகப்பட்டினம் சிக்கல் நவநீதேஸ்வரசுவாமி கோயில் கிபி 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். இந்த கோயில் மாடக்கோயில்களில் சிறப்பு பெற்றது. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், அருணகிரி நாதர் ஆகியோரின் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த ஸ்தலம். வசிஷ்ட மகரிஷி பூஜித்த ஸ்தலம் ஆகும். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த ஸ்தலம் ஆகும். இதனால் சிக்கல் சிங்காரவேலர் கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

சூரசம்ஹார நாளில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சிங்காரவேலர் வேல் வாங்கியவுடன் சிங்காரவேலர் உடல் முழுவதும் வியர்வை சிந்தும் காட்சி இன்று வரை நடைபெறுகிறது. இவ்வாறு பல்வேறு புகழ்பெற்ற சிக்கல் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கடந்த 1932, 1961, 1991, 2004-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் 18 ஆண்டுகள் கடந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்ப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது பஞ்சவர்ண வேலைகள், நவநீதேஸ்வரசுவாமி, வேல்நெடுங்கண்ணி அம்பாள், சிக்கல் சிங்காரவேலர், கோலவாமனபெருமாள், கோமளவல்லி தாயார், வரதஆஞ்சநேயர் விமானங்கள் புதுப்பித்தல் பணி நடந்து வருகிறது.

இதில் சிறப்பு கார்னேஷன்ஹால் (பழைய திருமணமண்டபம்) பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள கருங்கல் சுவர்களில் உள்ள சுண்ணாம்பு காரைகளை அகற்றி உள்புறம், வெளிப்புறம் பிரகாரங்கள் தரைத்தளம் மற்றும் மதில்சுவர் சுண்ணாம்பு காரைகள் கொண்டு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக டன் கணக்கில் சுண்ணாம்புகள் கொண்டு வந்து அரைத்து பழமை மாறாமல் சுண்ணாம்பு காரைகள் கொண்டு பூசப்படுகிறது.

The post கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலர் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: