ஓட்டல் உரிமையாளர் கொலையில் பகீர் திருப்பம் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக படம் எடுக்க முயன்றதை எதிர்த்ததால் கொலை

*சுத்தியலால் தலையில் அடித்தனர்

திருவனந்தபுரம் : கோழிக்கோடு ஓட்டல் உரிமையாளர் கொலையில் பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியை சேர்ந்தவர் சித்தீக் (58). கோழிக்கோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 18ம் தேதி திடீர் என சித்தீக் மாயமானார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி மலைப்பாதையில் சித்தீக்கின் உடல் பாகங்களுடன் 2 சூட்கேஸ்கள் மீட்கப்பட்டன.

சித்தீக் மாயமான அன்று அவரது ஓட்டலில் பணிபுரிந்த பாலக்காட்டை சேர்ந்த ஷிபிலி (22) என்ற ஊழியரும் மாயமாகி இருந்தார். விசாரணையில் ஷிபிலி, பர்ஹானா (19) என்ற இளம் பெண்ணுடன் சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னைக்கு சென்ற போலீசார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்தனர். நேற்று அதிகாலை திரூருக்கு கொண்டுவரப்பட்ட இவர்களிடம் எஸ்பி சுஜித் தாஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: சித்தீக்கின் ஓட்டலில் பணியாற்றிய ஷிபிலி பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்ததால் அவரை சித்தீக் பணியிலிருந்து நீக்கியுள்ளார். ஷிபிலிக்கு பர்ஹானா(19) என்ற இளம்பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. பர்ஹானாவுடன் சித்தீக்கும் தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த விவரம் ஷிபிலிக்கு தெரியாது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சித்தீக்குடனான நெருங்கிய தொடர்பு குறித்து தவறுதலாக ஷிபிலியிடம் பர்ஹானா கூறியுள்ளார்.

இதையடுத்து பர்ஹானாவை பயன்படுத்தி சித்தீக்கிடம் பணம் பறிக்க அவர் திட்டமிட்டார். இதன்படி கடந்த 18ம் தேதி பர்ஹானா மூலம் சித்தீக்கை கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலுக்கு வரவழைத்துள்ளனர். அந்த ஓட்டலில் சித்தீக் வருமுன்னே ஷிபிலி அவரது கூட்டாளி ஆஷிக் மற்றும் பர்ஹானா ஆகியோர் தயாராக இருந்தனர். சித்தீக் அறைக்கு வந்த உடன் ஷிபிலியும் ஆஷீக்கும் அவரை நிர்வாணப்படுத்தி பர்ஹானாவுடன் போட்டோ எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு சித்தீக் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து சுத்தியலால் ஷிபிலியும் ஆஷிக்கும் அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சித்தீக் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதன் பிறகு எலெக்ட்ரிக் கட்டர் பயன்படுத்தி உடலை இரண்டாக அறுத்து இரண்டு சூட்ேகஸ்களில் அடைத்து அட்டப்பாடி மலைப்பகுதியில் வீசியுள்ளனர்.

நெஞ்சில் ஏற்பட்ட பலத்த காயம் தான் சித்தீக்கின் மரணத்திற்கு காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இற்கிடையே சித்தீக்கின் ஏடிஎம், ஆதார் கார்டுகள் மற்றும் உடலை அறுக்க பயன்படுத்திய கட்டர்களை போலீசார் பெரிந்தல் மண்ணா பகுதியில் இருந்து மீட்டனர். டிவி சத்தத்தை கூட்டி வைத்துள்ளனர்

கொலை செய்யும்போது சித்தீக் அலறும் சத்தம் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டல் அறையில் இருந்த டிவியின் சத்தத்தை கூட்டி வைத்துள்ளனர். சித்தீக்கை கொலை செய்த பின்னர் அவரது உடலை எலக்ட்ரிக் கட்டர் மூலம் இரண்டு துண்டுகளாக வெட்டியுள்ளனர்.

 

The post ஓட்டல் உரிமையாளர் கொலையில் பகீர் திருப்பம் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக படம் எடுக்க முயன்றதை எதிர்த்ததால் கொலை appeared first on Dinakaran.

Related Stories: