கூடுதல் விலைக்கு விற்க கூடாது டாஸ்மாக் இரவு 10 மணி வரை மட்டுமே: அமைச்சர் உத்தரவு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் உள்துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் விசாகன் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும், இதில் எந்தவித விதிமீறல்களும் இருக்க கூடாது.

சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும்பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்கு தெரிவித்து, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

The post கூடுதல் விலைக்கு விற்க கூடாது டாஸ்மாக் இரவு 10 மணி வரை மட்டுமே: அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: