ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் புரபேஷனரி ஆபீசர்

பணி: Probationary Officers
1. Accounts : 1 இடம். தகுதி: சிஏ/ஐசிடிபிள்யூஏ/சிஎப்ஏ பிரிவில் தேர்ச்சி.
2. Legal: 4 இடங்கள். தகுதி: சட்டப் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
3. Company Secretary: 1 இடம். தகுதி: கம்பெனி செகரட்டரி தேர்ச்சியுடன் ஐசிஎஸ்ஐ யில் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும்.
4. Actuary: 2 இடங்கள். தகுதி: ஐஏஐயில் ஒரு உறுப்பினராகவும், சிஎம் 1, சிஎஸ் 1 மற்றும் சிஎஸ் 2 பிரிவுகளில் 3 பேப்பர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. IT: 2 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி அல்லது எம்சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. IT/CISO: 1 இடம். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமேன்டேசனில் பி.இ.,/பி.டெக்.,
7. Country Underwriting/Research: 1 இடம். தகுதி: Statistics/Mathematical Statistics/Mathematical Economics/Econometrics/Statistics & Informatics ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம்
8. Rajbhasah/Hindi: 4 இடங்கள். தகுதி: இந்தி/ஆங்கிலம் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியை மொழி மாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
9. Data Science: 1 இடம். தகுதி: டேட்டா சயின்ஸ் பாடத்தில் முதுகலைப் பட்டம்.
மேற்குறி்ப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் சம்பளம்: ரூ.53,600- 90,630.

வயது: 01.04.2023 அன்று 21 லிருந்து 30க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.04.1993 தேதிக்கு பின்பும், 01.04.2002 தேதிக்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.ecgc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2023.

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் புரபேஷனரி ஆபீசர் appeared first on Dinakaran.

Related Stories: