நாகர்கோவில் டவுண் ரயில் நகரில் கிருஷ்ணன்கோயில் கிளைக்கால்வாயில் ஆக்ரமிப்பு அகற்றப்படுமா?

நாகர்கோவில் : நாகர்கோவில் ரயில்நகரில் கிருஷ்ணன் கோயில் கிளைக் கால்வாயில் ஆக்ரமிப்பு அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் பகுதியில் விவசாயத்திற்காக அனந்தனாறு கால்வாயில் இருந்து கிருஷ்ணன்கோயில் கிளை கால்வாய் மூலம் தண்ணீர் முன்பு வந்து கொண்டிருந்தது. இதில் கணியாகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நாகர்கோயில் டவுண் ரயில் நகர் பகுதிக்கு அன்பு இல்லம் பகுதியில் இருந்து தனியாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்நகர் சாலையின் கிழக்கு பகுதியில் இந்த கால்வாய் அமைந்துள்ளது.

இதேபோல் கிருஷ்ணன்கோயில் கால்வாயில் மழைக்காலங்களில் தண்ணீர் மிகுதியாக வரும்போது, தண்ணீர் வெளியேற இரு மடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மடைகள் ரயில்நகர் சாலையின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. காலபோக்கில் விவசாயம் மறைந்து அனைத்தும் வீட்டு மனைகள் ஆனதால் தற்போது மழைநீரும் கழிவுநீரும்தான் இந்த கால்வாய்களில் செல்கின்றன.

இந்நிலையில் கிழக்கு பக்கம் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் ஆக்ரமிப்புகள் காரணமாகவும், அதன் மேல் ேபாடப்பட்ட கான்கிரீட் சிலாப்புகள் பெயர்ந்தும் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளன. தேங்கிய கழிவுநீர் மேற்கு பகுதியில் உள்ள ஓவர் புளோ மடைகள் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் மொத்தமாக பாய்கிறது.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு அதிகாரிகளிடம் பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக கிழக்கு பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாகர்கோவில் டவுண் ரயில் நகரில் கிருஷ்ணன்கோயில் கிளைக்கால்வாயில் ஆக்ரமிப்பு அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: