இனிப்பான வேம்பு மரம்..ஆல்கஹால் இல்லாத நகரம்: சீரடி சாய்பாபா கோவில் பற்றிய சில உண்மைகள்..!!

மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் சீரடி சாய்பாபா. இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, சீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சீரடி என்ற இடம் சாய் பாபாவின் வீடு என்று அறியப்படுகிறது.

சாய் பாபாவை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும் என்கிற நம்பிக்கை உண்டு. மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த தெய்வங்களான பல மாகன்கள் இருந்த போதிலும், மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் சீரடி சாய்பாபா. அற்புதங்களை சாய்பாபா மட்டும் செய்யவில்லை சீரடியில் உள்ள பலவும் அற்புதங்களால் நிறைந்துள்ளது.

இனிப்பான வேம்பு மரம் : சாய் பாபா சீரடிக்கு வந்தபோது, அவர் தனது பெரும்பாலான நேரத்தை ஒரு வேம்பு மரத்தின் கீழ் கழித்தார், அது இப்போது குருஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. ஒரு புராணத்தின் படி, சில கிராமவாசிகள் ஒரு வேம்பு மரத்தின் அருகே நிலத்தைத் தோண்டத் தொடங்கியபோது, சாய் பாபா, இந்த இடம் உங்களின் மூதாதையர்கள் ஓய்வெடுக்கும் இடம் என்று கூறி நிலத்தை தோண்ட வேண்டாம் என்று சொன்னார். நீங்கள் எப்போதாவது சீரடிக்குச் சென்று, மரத்திலிருந்து விழுந்த வேப்ப இலையை ருசிக்க வாய்ப்பு கிடைத்தால், முதலில் அதை சுவைத்துப் பாருங்கள், வேப்பிலையின் சுவை நீங்கள் நினைத்ததுபோல் கசக்காது இனிக்கும்…! மேலும் வேப்ப இலையை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை இருப்பதோடு எந்த நோய்களாலும் அவர்களை அண்டாது என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

ஆல்கஹால் இல்லாத நகரம்: சீரடியில் மதுவை குடிப்பதற்கான முறைகள் வேறுமாதிரி இருக்கும். நகரத்தின் பெரும்பாலான இடங்களில் ஆல்கஹால் விற்கப்படுவதில்லை.

சாய் பாபாவின் உண்மை பெயர் இன்னும் தெரியவில்லை: மக்கள் அவரை வணங்கி பல வருடங்கள் கழித்து, சாய் பாபாவின் உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. அவர் உடையணிந்த விதம் காரணமாக மக்கள் அவரை ஃபக்கீர் என்று அழைத்தனர். முதன்முதலில் ‘சாய்’ என்று ஒரு கோயில் பூசாரி அழைத்ததாக வாய்வழி கதைகள் கூறப்படுகிறது.

சாய் சீரடிக்கு சிறப்பு ரயில்கள்: சாய் பாபாவின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை காண சீரடிக்குச் செல்கிறார்கள். இந்த காரணத்திற்காக, இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை சீரடிக்கு அனுப்புகிறது. ‘சைனகர் சீரடி ரயில் நிலையத்தை’ இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக அடைய முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ள பூரியிலிருந்து மேற்கில் சீரடிக்கு வெறும் 24 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஊரிலிருந்தும் இதற்கான தொலைவை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வியறிவு: சீரடி நாட்டில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள நகரமாகும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தில் சராசரி கல்வியறிவு விகிதம் 70 சதவீதமாக இருந்தது. இது 59.5 சதவீதமான தேசிய கல்வியறிவு வீதத்தை விட உயர்ந்தது.

சாய் பாபா கோயிலின் கட்டுமானமும் உரிமையும்: சாய் பாபா பூவுலகைவிட்டு மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீரடியில் உள்ள சாய் பாபா கோயில் 1922 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த ஆலயம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரராக இருந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்பவருக்கு சொந்தமானது. சாய் பாபாவின் பெரிய பக்தராக இருந்த அந்த பணக்காரர், பாபா மறைந்த பின்னர் ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார். இருப்பினும், இப்போது இந்த கோயில் ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவருகிறது. ஆந்திராவின் திருப்பதிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள இரண்டாவது பணக்கார கோயில் இதுவாகும்.

ஒரு அறிக்கையின்படி, சாய் கோவிலில் ஆசீர்வாதம் பெற தினமும் சுமார் 60,000 பேர் சீரடிக்கு வருகிறார்கள். ‘சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன்’ என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு.

சிலருக்கு பாபாவை பற்றி துளி அளவு கூட எந்த விஷயமும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்களை மிகக்குறுகிய காலத்தில் சாய்பாபா தனது அதிதீவிர பக்தனாக மாற்றி இருக்கிறார். சாய் பாபாவை நம்பினால் உங்களுக்குள்ளும் அதிசயங்கள் நடைபெறும்.

The post இனிப்பான வேம்பு மரம்..ஆல்கஹால் இல்லாத நகரம்: சீரடி சாய்பாபா கோவில் பற்றிய சில உண்மைகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: