வாஷிங்டன்: அதானி குழுமம் பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், மீண்டும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி இடம் பிடித்தார். சர்வதேச பங்கு வர்த்தகத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்கு வர்த்தகம் மட்டுமின்றி, உலக தொழிலதிபர்களின் முன்னணி பட்டியலில் இருந்து கவுதம் அதானி பின்னுக்கு தள்ளப்பட்டார். பெரும் பொருளாதார அடியை அதானி குழுமம் சந்தித்த நிலையில், தற்போது அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருகிறது.
அந்த வகையில், மீண்டும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக கவுதம் அதானி முன்னேறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இதுகுறித்து ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்ட பில்லியனர்கள் பட்டியலில், தற்ேபாது 23வது இடத்தில் உள்ள அதானி 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்து வருவதால், அவரது சொத்து மதிப்பு 64.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிகர மதிப்பு 4.38 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக கவுதம் அதானி முன்னேறி உள்ளார். சீனாவைச் சேர்ந்த ஜாங் ஷான்ஷன் 62.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 19வது இடத்தில் உள்ளார். டாப்-10 உலக பணக்காரர்களில் ஒன்பது பெரும் பணக்காரர்கள் அமெரிக்கர்கள் ஆவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் மீண்டும் ஆசியாவின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் அதானி appeared first on Dinakaran.