ஆவினை சீரமைக்க பணியாளர்களுக்கு 12 உத்தரவுகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்

சென்னை: ஆவின் நிர்வாகத்தை சீரமைக்கும் வகையில் நிர்வாகத்தின் 12 உத்தரவுகளை பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு:

* பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் வங்கி கணக்குகள் மூலம் வழங்க வேண்டும்.

* பால் பதப்படுத்துதல் பேக்கேஜிங் மற்றும் லோடிங் செய்யும் இடங்கள், பிரதான வாயிலில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும்

* பயோ மெட்ரிக் மூலம் பணியாளர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.

* அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் எப்.சி., மற்றும் வாகனத்தின் நிலை, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

* விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் தொடங்கி பி.எம்.சி., மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு வந்தடைந்தடையும் கால இடைவெளியை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் வந்தடைவதை உறுதிபடுத்த வேண்டும்.

* கூட்டுறவு பால்கொள்முதல் நிலையங்கள் தனிநபர்களுக்கு பால் விற்பனை செய்வதை நிர்ணயிக்கப்பட்ட 10% அளவிற்கு கட்டுப்படுத்த வேண்டும் முடியாத சூழலில் அவற்றை கூட்டுறவு சங்க கணக்குகளில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

* தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்வதும் அவற்றில் சர்க்கரை, யூரியா, ஸ்டார்ச் உள்ளிட்ட பல்வேறு வேதி பொருட்கள் கலப்படம் செய்து பாதுகாப்பு விதிகளை மீறி உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க கலெக்டர்கள் உதவியுடன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* பால் பதப்படுத்துதல் மற்றும் கையாளுவதில் வரும் இழப்பை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பால் உற்பத்தியாளர்களுக்கு குறித்த நேரம் தவறாமல் பணம் பட்டுவாடா செய்தல்.

* கூட்டுறவு சங்கங்களிலிருந்து பி.எம்.சி-களுக்கு பால் எடுக்கும்போது கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை அந்த இடத்திலே அளவீடு செய்ய வேண்டும்.

* பி.எம்.சி., மையங்களில் இருந்து ஒன்றியத்திற்கு பால் எடுக்கப்படும் பொழுது அங்கேயே கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை அந்தந்த இடத்திலே அளவீடு செய்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

The post ஆவினை சீரமைக்க பணியாளர்களுக்கு 12 உத்தரவுகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: