The post தமிழ்நாட்டில் கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% உயர்வு appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% உயர்வு
நெல்லை:இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் அனைத்து மண்டல இணை ஆணையர்கள், அனைத்து இணை, துணை, செயல் அலுவலர்கள், அனைத்து உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் அறநிலையத் துறையின் 2005 ஜூன் 30ம் நாள் அரசு கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் கோயில்களில் பணிபுரியும் நிரந்தர கோயில் பணியாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி 42 சதவீதமாக வழங்கிட அனுமதி வழங்கப்படுகிறது.