நியூயார்க் போலீஸ் உயர் பதவிக்கு இந்திய பெண் நியமனம்

நியூயார்க்: நியூயார்க் போலீஸ் துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதிமா புல்லார் மால்டொனாடோ நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் பிறந்த பிரதிமா தன்னுடைய 9 வயதில் அமெரிக்காவுக்கு வந்து குடியேறினார். நியூயார்க் போலீஸ் துறையில் முதலில் காவலராக சேர்ந்த பிரதிமாவுக்கு கடந்த மாதம் கேப்டனாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. நியூயார்க் போலீசில் தெற்காசிய சமூகத்தை ஒருவருக்கு கேப்டன் பதவி தரப்படுவது இதுவே முதல் முறை ஆகும். நியூயார்க் போலீஸ் துறையில் மொத்தம் உள்ள 33 ஆயிரத்து 787 ஊழியர்களில் 10.5 சதவீதத்தினர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நியூயார்க் போலீஸ் உயர் பதவிக்கு இந்திய பெண் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: