வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தாய் மூகாம்பிகை சிலைக்கு சிறப்பு பூஜை

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் மருத்துவக்கடவுளான தன்வந்திரி பெருமாளுக்கு தனிக்கோயில் உள்ளது. அதேபோல் இங்கு ஆதிசங்கரர் நிறுவிய ஷண்மத தெய்வங்களுக்கும் தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளது. மேலும் 468 சித்தர்கள் லிங்கவடிவில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோயிலில் 5 அடி உயர முள்ள தாய் மூகாம்பிகை, 5 அடி உயரமுள்ள ஸ்ரீவீரபத்திரர் மற்றும் 2 அடி உயரமுள்ள தட்சன், காளி ஆகிய கற்சிலைகள் மாமல்லபுரத்திலிருந்து கரிக்கோலமாக நேற்று வருகை தந்தது.

டாக்டர் முரளிதரசுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் 108 கலச திருமஞ்சனம் மற்றும் தன்வந்திரி மகாயாகம் நடந்தது. இதில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். தொடந்து இந்த சிலைகள் வரும் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் என முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.

The post வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தாய் மூகாம்பிகை சிலைக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: