பாஸ்பேட், பொட்டாஷ் உரத்துக்கு ரூ.38 ஆயிரம் கோடி மானியம்

புதுடெல்லி: பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், நடப்பு காரீப் பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் கிடைக்கச் செய்வதற்கு இது வழிவகுக்கும். மானிய விலையில் தரமான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம் கிடைக்கச் செய்வது என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற காரீப் 2023-க்கு அரசு ரூ.38,000 கோடி மானியம் வழங்கும்.

யூரியா மானியத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா கூறுகையில்,‘‘நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காரீப் பருவத்தில் அரசு ரூ.1.08 லட்சம் கோடி அரசு செலவிடும். உரத்தின் விலை அதிகரிக்கப்படாது. இதில் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். ரூ.2.25 லட்சம் கோடி அரசுக்கு செலவாகும்’’ என்றார்.

* ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு…

மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.17 ஆயிரம் கோடியிலான ஐடி ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் 2.0க்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலகில் செல் போன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது மிக பெரிய நாடாக உள்ளது. நடப்பு ஆண்டு ரூ.90 ஆயிரம் கோடி செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப(ஐடி) ஹார்டுவேர் கம்பெனிகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் 2.0க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The post பாஸ்பேட், பொட்டாஷ் உரத்துக்கு ரூ.38 ஆயிரம் கோடி மானியம் appeared first on Dinakaran.

Related Stories: