அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 2,23,000 வீடுகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

மயிலாடுதுறை: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அளித்த பேட்டி: முதல்வரின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆயிரம் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.823 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் 15 நாட்களில் நிறைவடையும். இப்பள்ளிகளில் வகுப்பறைகள் ஜூன் மாதம் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பட்டா வழங்காமல் உள்ளவர்களுக்கு மிக விரைவில் பட்டா வழங்கப்படும். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின், தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1296 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் ரூ.209 கோடி செலவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 2,23,000 வீடுகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: