பரவும் H3N2 இன்ஃப்யூயன்ஸா வைரஸ்… காக்கும் தடுப்பூசி!

நன்றி குங்குமம் டாக்டர்

இப்போதுதான் கொரோனா எனும் கொடூர அரக்கனிடம் இருந்து தப்பித்தோம். இதோ இன்னொரு வைரஸ் ஹெச்3என்2 இப்போது தீவிரமாய் பரவிவருகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலும் உலக சுகாதார மாமன்றமும் இது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்த தொற்றுநோயால் இருவர் இறந்திருப்பது அச்சத்தை அதிகரித்திருக்கிறது. சரி அதென்ன ஹெச்3என்2… வாங்க பார்க்கலாம்!

ஐசிஎம்ஆர் (ICMR) இன் சமீபத்திய அறிக்கைகளில் H3N2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளன. இந்த வைரஸ் திரிபு நீண்டகால நோயை ஏற்படுத்துகிறது. பிற வகை திரிபுகளால் ஏற்படும் காய்ச்சல் நோய்த்தொற்றுகளைவிட அதிகமான மருத்துவமனை தங்கல்களுக்கு வழிவகுக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வலிப்புத் தாக்கங்கள் போன்ற சிக்கல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் H3N2 உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கலாம். கடந்த மூன்று மாதங்களில், H3N2 சிக்கல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10% நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது மற்றும் 7% ICU கவனிப்பும் தேவைப்பட்டுள்ளதை ICMR தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

வைரஸின் துணை வகை ஒவ்வொரு ஆண்டும் பருவகால மாற்றங்கள், வெப்பநிலை மாற்றம் காய்ச்சல் வைரஸ்கள் அதிகரித்து வேகமாக பரவ வழிவகுக்கின்றன. ஆண்டுதோறும் சில துணை வகைகள் மற்றவற்றைவிட அதிகமாகப் பரவுகின்றன. H3N2 உட்பட அனைத்துக் காய்ச்சல் வைரஸ்களும் பாதிக்கப்பட்ட நபர் இருமுவதாலும் தும்முவதாலும் பேசும்போதும் பிறருக்குப் பரவுகின்றன. நோய்த்தொற்று இல்லாதவர்கள் இந்த வைரஸ்களால் மாசுபட்ட ஒரு பொருளை அல்லது மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் அவர்களின் மூக்கு அல்லது வாயைத் தொடும்போதும் அவை பரவலாம்.

யாருக்கு ஆபத்து?

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், வயதான பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சர்க்கரை நோய், ஆஸ்துமா, சிறுநீரக நோய் மற்றும் இதயநோய் போன்ற நாள்பட்ட நிலைமைகளைக் கொண்டவர்கள் H3N2 காய்ச்சலுக்கு ஆபத்தில் உள்ளவர்கள்.

அறிகுறிகள்

காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், சளி அல்லது மூக்கடைப்பு மற்றும் தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை காய்ச்சல் நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும். H3N2 நோய்த்தொற்றில், காய்ச்சல் பொதுவாக மூன்று நாட்களுக்கு நீடிக்கும், ஆனால் இருமல் 3 வாரங்கள் நீடிக்கும்.அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் அப்துல் அஹத் அவர்கள்,” சமீபத்திய அறிக்கைகள் H3N2 காய்ச்சல் வைரஸின் தீவிரத்தைப் பற்றி தெரிவிக்கின்றன.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த நோய்த்தொற்றின் ஆபத்தில் இருக்கலாம் மற்றும் இது அவர்களுக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. காய்ச்சல் தடுப்பூசி இந்த சிக்கல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். பெற்றோர்கள் தங்கள் மருத்துவர்களிடம் இது குறித்து பேச வேண்டும்” என்று கூறினார்‘‘சமீபத்திய செய்தி அறிக்கைகள் H3N2 காய்ச்சலின் தீவிரத்தைப் பற்றி தெரிவிக்கின்றன. வயதான பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நிலைமைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும். 4 இன் 1 ஃப்ளூ தடுப்பூசியைப் பற்றி உங்கள் மருத்துவர்களிடம் பேசுங்கள், இது H3N2 மற்றும் 3 பிற காய்ச்சல் திரிபுகளுக்கு எதிராகப் பாதுகாக்க உதவும்” என்று கூறுகிறார், கிளென்கிளேஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில், நுரையீரல் நிபுணர் டாக்டர் S சுரேஷ், MD அவர்கள்.

சுகாதாரப் பணியாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 6 மாதங்கள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் போன்ற அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு பருவகால காய்ச்சல் தடுப்பூசிகளை பல்வேறு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். H3N2 காய்ச்சலைத் தடுக்கவும், அதன் பரவலைத் தடுக்கவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பிற நடவடிக்கைகள், அடிக்கடி கைகளைக் கழுவுதல், நெரிசலான இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பைத் தவிர்த்தல் ஆகியவையாகும்.

தொகுப்பு : மதுசூதனன்

The post பரவும் H3N2 இன்ஃப்யூயன்ஸா வைரஸ்… காக்கும் தடுப்பூசி! appeared first on Dinakaran.

Related Stories: