திருப்பத்தூர் அருகே சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பரபரப்பு: வனத்திற்குள் விரட்டும் பணி 3வது நாளாக நீடிக்கிறது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணி தொடர்ந்து 3வது நாளாக நீடிக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 6 பேரை கொன்ற இந்த இரண்டு காட்டு யானைகளும் ஆந்திர வனப்பகுதியில் இருந்து 4 நாட்களுக்கு முன்னர் வழி தவறி நாட்றம்பள்ளி பகுதிகளில் நுழைந்தது. தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் இந்த இரு யானைகளும் தற்போது ஏலகிரி அடிவார பகுதியில் முகாமிட்டுள்ளன. வெங்காயப்பள்ளி, பால்நான்கு குப்பத்தில் உள்ள யானைகளை ஜவ்வாது மலை காட்டு பகுதிக்குள் விரட்டும் பணியில் போலீசாரும், வனத்துறையினரும் 3வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகளை மேளம் அடித்தும், வெடிகளை வெடித்தும் துரத்தி வருகின்றனர். இந்த காட்டு யானைகளால் சுற்றுவட்டார மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் விளைநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யானையை பார்க்கும் ஆவலில் இளைஞர்கள் பின் தொடர்ந்து ஓடுவது, அவற்றை விரட்டும் நடவடிக்கைக்கு இடையூறாக இருப்பதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளை விரட்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post திருப்பத்தூர் அருகே சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பரபரப்பு: வனத்திற்குள் விரட்டும் பணி 3வது நாளாக நீடிக்கிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: