மகன் காது குத்தும் நிகழ்வுக்கு லீவு கிடைக்காததால் மாத்திரைகள் சாப்பிட்டு காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: மகன் காது குத்தும் நிகழ்வுக்கு விடுமுறை கிடைக்காததால் மனமுடைந்த காவலர் ஒருவர் அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகேஷ் (34). மாநகர காவல்துறையின் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில், சட்டம் -ஒழுங்கு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகனுக்கு இந்த வாரம் காது குத்தும் நிகழ்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மகேஷ், உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார்.

அதற்கு அடிக்கடி விடுமுறை எடுப்பதாக கூறி விடுமுறை அளிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வந்த காவலர் மகேஷ் நேற்று முன்தினம் இரவு அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். விரைந்து செயல்பட்டதால் காவலர் உடனே காப்பாற்றப்பட்டார். பின்னர் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் ஒருவர் தனது மகன் காது குத்து நிகழ்வுக்கு விடுமுறை கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மகன் காது குத்தும் நிகழ்வுக்கு லீவு கிடைக்காததால் மாத்திரைகள் சாப்பிட்டு காவலர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: