முதல்வர் மம்தாவுடன் நடிகர் சல்மான்கான் சந்திப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கொல்தாவில் உள்ள முதல்வர் மம்தா வீட்டிற்கு மாலை சென்ற சல்மான்கான் அங்கு அவரை சந்தித்தார். சுமார் அரைமணி நேரம் அவர் முதல்வருடன் கலந்துரையாடினார்.

சல்மான் கான் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாலையில் நடந்த கால்பந்து சங்க நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் பங்கேற்றார்.

The post முதல்வர் மம்தாவுடன் நடிகர் சல்மான்கான் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: