கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பெறுகிறது காங்கிரஸ்: பாஜக அமைச்சர்கள் 8 தொகுதிகளில் பின்னடைவு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 117 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற‌து. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் ஆளும் பாஜ 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223, மஜத 207 உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். காங்கிரஸ், பாஜ, மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 34 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி; பெரும்பான்மைக்குத் தேவையான 120 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான பாஜக 76 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமைச்சர்கள் 8 தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பாஜக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, சிமோகா தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளார்.

The post கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பெறுகிறது காங்கிரஸ்: பாஜக அமைச்சர்கள் 8 தொகுதிகளில் பின்னடைவு appeared first on Dinakaran.

Related Stories: