ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை பிளஸ் 1 துணைத்தேர்வு தேர்வு நடைபெறும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை பிளஸ் 1 துனைத்தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து துணை தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 94 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று முதல் வருகிற 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு துணைத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 11-ம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை பிளஸ் 1 துணைத்தேர்வு தேர்வு நடைபெறும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: