தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை மசோதா அதிகாரபூர்வமாக வாபஸ்

சென்னை: தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டு வந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் வேலு, அன்பரசன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆலோசனை கூட்டம் மே 1 அன்று மேற்கொண்டு வந்தனர்.

மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை நடைபெற்று வந்தநிலையில், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை மசோதா அதிகாரபூர்வமாக வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. இந்த 12 மணி நேர வேலை மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த நிலையில் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அது திரும்பப்பெறப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது அது அதிகாரபூர்வமாக திரும்பபெறப்பற்றதுக்கு தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை மசோதா அதிகாரபூர்வமாக வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: