மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகள், 1999ன் படி திருவள்ளூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று திருத்தணி நகராட்சியில் வெளியிடப்பட்டது.

இது குறித்து, திருத்தணி நகராட்சி ஆணையர் சி.ராமஜெயம் கூறுகையில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் திருத்தம் இருந்தால் நாளை இன்று மாலை, 3 மணிக்குள் சம்மந்தப்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து புகார் தெரிவிக்கலாம். தொடர்ந்து நாளை மறுநாள் (4ம் தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிகளுக்கு 24 வாக்காளர்கள், ஆவடி மாநகராட்சிக்கு 48 வாக்காளர்கள், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி, பூந்தமல்லி, திருவேற்காடு மற்றும் திருநின்றவூர் ஆகிய ஆறு நகராட்சிகளுக்கு 139 வாக்காளர்கள், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக் கோட்டை, திருமழிசை, நாரவாரிகுப்பம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆரணி ஆகிய எட்டு பேரூராட்சிகளுக்கு 128 வாக்காளர்கள் என மொத்தம் 339 வாக்காளர்கள் பெயர்கள் கொண்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என கூறினார். இதில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

The post மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: