முதுமலை யானைகள் முகாமில் உள்ள மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு..!!

நீலகிரி: முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கியதில் அதன் பாகன் பாலன் என்பவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.இங்கு கும்கி யானைகள், சவாரிக்கு பயன்படும் யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் மற்றும் குட்டி யானைகள் உள்ளிட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கியதில் அதன் பாகன் பாலன் என்பவர் உயிரிழந்தார். யானைக்கு உணவு அளித்துவிட்டு அழைத்துச் சென்றபோது திடீரென தாக்கியதில் பாகன் பாலன் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த பாகன் பாலன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஏற்கனவே 2019-ல் சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார். பாகனை கொன்ற நிலையில் 2019ல் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது மசினி யானை.

The post முதுமலை யானைகள் முகாமில் உள்ள மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: