தஞ்சாவூர்: இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டி: 12 மாவட்டங்களில் தூர் வாருவதற்காக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தமுறை மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். 834 மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு 4,773 கி.மீ. வரை தூர் வாரப்பட உள்ளது. கடந்த முறை தூர்வாரும் பணி மக்கள் பாராட்டும் வகையில் அமைந்தது போல, இந்த முறையும் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பாசனதாரர்களும் பாராட்டும் வகையில் தூர் வாரும் பணி அமையும். இந்த ஆண்டு உரிய நேரத்தில் (ஜூன் 12ம் தேதி) மேட்டூர் அணை திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும்; அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.
