திருப்போரூரில் விஐடி சார்பில் `ஓபன் ஹவுஸ்’ கண்காட்சி

சென்னை: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி), ‘ஓபன் ஹவுஸ் 2023’ என்ற புராஜக்ட் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருப்போரூரில் நடைபெற்றது. இதில், ​​இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் புராஜக்ட்டுகளை காட்சிப்படுத்தினர். இதில் நீர் மேலாண்மை, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு, பயோமெடிக்கல் சிக்னல் பாரசஸிங் உள்ளிட்டவை தொடர்பாக 800 புராஜக்ட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விழாவில், விஐடி இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் கலந்து கொண்டு புராஜக்ட்களை பார்வையிட்டு ஸ்டார்ட் அப்களைத் திட்டமிட மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இதில், தலைமை விருந்தினரான பிசிலி டெக்னாலஜி துணை தலைவர் திலீப்குமார், கவுரவ விருந்தினரான பிசிலி டெக்னாலஜி தொழில்நுட்ப இயக்குநர் கோடீஸ்வரன் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த புராஜெக்களை தயாரித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர். புதிய கண்டுப்பிடிப்புகளை ஊக்கப்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு மாணவ, மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

The post திருப்போரூரில் விஐடி சார்பில் `ஓபன் ஹவுஸ்’ கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: