2 குழந்தைக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது: அஜித் பவார் வலியுறுத்தல்

புனே: ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு எம்பி, எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட சீட் தரக்கூடாது’ என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாராமதியில் நடந்த விழாவில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் கூறியதாவது: மக்கள் தொகையில் சீனாவை முந்தி இந்தியா நம்பர் 1 இடத்திற்கு வந்து விட்டது. நாம் சுதந்திரம் பெற்ற போது இந்தியாவின் மக்கள் தொகை 35 கோடி. இப்போது 142 கோடி. இதற்கு நாம் அனைவருமே பொறுப்பு. அனைத்து கட்சிகளும் இப்பிரச்னையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இனிமேல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு எந்த சலுகையும் தரக்கூடாது. முன்பு, கிராம பஞ்சாயத்து, ஜில்லா பரிஷத் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு சீட் கிடையாது என்ற முடிவை எடுக்கும் போது நாங்கள் பயந்தோம். எம்பி, எம்எல்ஏ தேர்தலிலும் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க வேண்டும். 2 குழந்தைக்கு மேல் பெற்றவர்களை தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக மாற்றப்பட வேண்டும். இதை ஒன்றிய அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2 குழந்தைக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது: அஜித் பவார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: