கீழடியில் முதல்வரின் தனி செயலர் ஆய்வு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கி வைத்தார். இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் முதல்வரின் தனி செயலாளர் உதயசந்திரன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று ஆய்வு செய்தார். கட்டிட தொகுதிகளுக்கு இடையே உள்ள நடைபாதை கோடை வெயில் காரணமாக சூடாக இருப்பதால் கார்பெட் விரிக்க உத்தரவிட்டார். சுற்றுலாப் பயணிகளிடம் அருங்காட்சியகத்தில் உள்ள வசதிகள் குறித்தும், விரிவாக்கம் குறித்தும் கேட்டறிந்தார்.
தொல்லியல் துறை ஆணையர் (பொ) சிவானந்தம், சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கீழடியில் முதல்வரின் தனி செயலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: