பழையபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

நெல்லை, ஏப். 16: நெல்லை பழையபேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. பேட்டை, பழையபேட்டை, தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின்மாற்றிகள் பராமரிப்பு குறித்தும், கோடை காலத்தில் மின் நுகர்வு அதிகமுள்ள மாலை நேரங்களில் அனைவரும் கண்காணிப்புடன் பணிகளை தொடர வேண்டும். மின் நுகர்வோர்களின் வினாக்களுக்கு கனிவுடன் பதிலளிக்க வேண்டும்.

உபகோட்டத்திற்கு உட்பட்ட வளைய தரச் சுற்றுக்களும் பிரிவுபடுத்தல் முழு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் உதவி மின் பொறியாளர்கள் பழையபேட்டை அருணன், பேட்டை சரவணன், தச்சநல்லூர் சரவணகுமார், பழையபேட்டை உப மின்நிலையம் மேகலா மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post பழையபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: