அரவக்குறிச்சி எம்எல்ஏ தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்குழு கூட்டம்

வேலாயுதம்பாளையம், ஏப்.16: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.ஆய்வு கூட்டத்திற்கு புகழூர் நகர் மன்ற தலைவரும், புகழூர் நகர கழக செயலாளருமான ஏ. குணசேகரன் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ முன்னிலை வகித்தார். ஆய்வுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தலைமை கழக பொறுப்பாளரும், மாநில கழக வர்த்தகர் அணி துணை தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி வாக்குச்சாவடியில் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் பாரத், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவகாமி, தொழிற்சங்க செயலாளர் அண்ணா வேலு, நகர அவைத் தலைவர் வாங்கிலி முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். ஆய்வுக் கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்குச் சாவடி முகவர்கள், வாக்குச் சாவடி உறுப்பினர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் புகழூர் நகராட்சி 8-வது வார்டு பாஜக நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியை விட்டு விலகி தாய்க்கழகமான திமுகவில் இணைத்து கொண்டனர்.

The post அரவக்குறிச்சி எம்எல்ஏ தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: