ஊட்டியில் 4 கிலோ கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல்-ரூ.12 ஆயிரம் அபராதம்

ஊட்டி : ஊட்டியில் 4 கிலோ கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.ஊட்டி எட்டின்ஸ் சாலை, அரசு மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட தேனீர் கடைகள் உணவகங்கள் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சிவராஜ் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்ெகாண்டனர். அப்போது 5 கடைகளில் சாய மேற்றப்பட்ட கலப்பட தேயிலைத்தூள் பயன்படுத்தி தேனீர் தயாரித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சுமார் 4 கிலோ கலப்பட தேயிலைத்தூளை பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு உணவகத்தில் காலாவதியான சப்பாத்தி, புரோட்டா ஆகியவை பறிமுதல் ெசய்யப்பட்டது. தொடர்ந்து 6 கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான குடிநீர் போன்றவற்றை ஓட்டல்கள், கடைகள் வழங்க வேண்டும். தரமான தேயிலைத்தூளை மட்டுமே விற்க வேண்டும். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரமற்ற காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post ஊட்டியில் 4 கிலோ கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல்-ரூ.12 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: