காஞ்சிபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் கூடம் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் தேசிய மாணவர் படை 3வது பட்டாலியன் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏப்ரல் மாதம் 8ம் தேதியிலிருந்து வரும் 17ம்தேதி வரை தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி, அணி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் நடந்து வருகின்றன. இப்பயிற்சி முகாமை தேசிய மாணவர் படையின் சென்னை பிரிவு குரூப் கேப்டன் கமாண்டர் அருணாசலம் பார்வையிட்டார். பின்னர் அவ்வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முப்படை ராணுவ வீரர்களுக்கான காத்திருக்கும் கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு தேசிய மாணவர் படையின் 3வது பட்டாலியன் பிரிவு கமாண்டர் மகரா முன்னிலை வகித்தார். காத்திருக்கும் கூடம் திறப்புக்கு பின்னர் அவ்வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதனைத் தொடர்ந்து குருப் கேப்டன் அருணாசலம் தேசிய மாணவப் படையில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், சேருவதற்கான தகுதிகள் ஆகியன குறித்து விரிவாக பேசினார். இந்நிகழ்வில், முன்னாள் முப்படை வீரர்களுக்கான கேப்டன் சுப்பிரமணியன், அவில்தார் சண்முகம் உட்பட 25க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் கூடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: