திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் நியமனம்: தயாநிதி மாறன் எம்.பி. அறிவிப்பு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாக தயாநிதி மாறன் எம்பி அறிவித்துள்ளார். திமுகவில் புதிதாக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டு, அந்த அணியின் செயலாளராக தயாநிதி மாறன் எம்பி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனத்திற்கு விண்ணப்பம் வழங்கி, அதில் தகுதி உள்ளவர்களை ஆய்வு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், சென்னை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் குறித்து நேற்று அறிவித்தார்.

அதன்படி விளையாட்டு மேம்பாட்டு அணியின் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளராக ராயபுரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் துணை அமைப்பாளர்களாக தண்டையார்பேட்டை கதிரவன், புதுவண்ணாரப்பேட்டை லெனின், கொடுங்கையூர் பிரபு, வியாசர்பாடி தேவ அன்பு மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் வடசென்னை பகுதியில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் நியமனம்: தயாநிதி மாறன் எம்.பி. அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: